ஐஐடி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ வேண்டும் என்ற கேரள மக்களின் நீண்டகால கோரிக்கை பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ரப்பர் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. உம்மன் சாண்டி, கேரள முதல்வர் கேரளா புறக்கணிப்பு மத்திய பட்ஜெட்டில் கிழக்கு மாநிலங்களின் துரித வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிஹார், மேற்குவங்கத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒடிஸாவுக்கு ஒன்றுமில்லாதது ஏமாற்றமளிக்கிறது. நவீன் பட்நாயக், ஒடிஸா முதல்வர் ஒடிஸாவுக்கு ஒன்றுமில்லை அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ‘அடல் புதுமை திட்டம்’ நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ‘அடல் புதுமை திட்டத்தை’ மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். நிதி ஆயோக் அமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அமிர்தசரஸில் தோட்டக்கலை கல்வி நிறுவனம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் மருந்தியல் கல்வி நிறுவனங்கள், நாகாலாந்து, ஒடிஸாவில் அறிவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். கடந்த வாரம் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் ஒய்.எஸ். சவுத்ரி, நாட்டின் 6 பிராந்தியங்களில் தலா ஓர் அறிவியல் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்தது நினைவுகூரத்தக்கது. கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பட்ஜெட்டில் அருண் ஜேட்லி கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வருமான வரித் துறை தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளோர் குறித்த விவரங்களை ஆதாரங்களுடன் அளித்தால் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க அந்த நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக தானியங்கி தகவல் பரிமாற்றத்தை அமல்படுத்துவது குறித்து அந்த நாட்டுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மீட்பதற்கு புதிய சட்டம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த சட்டம் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும். இதில் மிகக் கடுமையான விதிகள் வரையறுக்கப்படும். வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருமானத்தை மறைத்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தின் மதிப்பில் 300 மடங்கு அபராதமாக விதிக்கப்படும். வெளிநாடுகளில் சொத்துகள் வைத்திருப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாய மாக்கப்படும். வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டு வங்கி முதலீடுகள் தொடர்பாக ஆண்டுதோறும் வருமான வரி தாக்கலின்போது தகவல் தெரிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் கருப்பு பணத்தை மீட்க உதவும் வகையில் பி.எம்.எல். சட்டம், பெமா சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ‘புதிய நேரடி வரிக் கொள்கையால் பயன் இருக்காது’ புதிய நேரடி வரிக் கொள்கையை (டிடிசி) அமல்படுத்துவதால் பெரிய அளவில் பயன் கிடைக்காது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வருமான வரிச்சட்டத்துக்கு மாற்றாக நேரடி வரிக்கொள்கை அமல்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான வரைவு மசோதாவை கடந்த 2008-ம் ஆண்டு வெளியிட்டது. இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே உடன்பாடு எட்டப்படாததால் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதுகுறித்து கூறும்போது, “நேரடி வரிக் கொள்கையை அமல்படுத்துவதால் பெரிய அளவில் பயன் கிடைக்காது. இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதாவில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள சில அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட பரிமாற்றத்துக்கு பான் எண் கட்டாயம் ரு.1 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப் பில் மேற்கொள்ளப்படும் விற்பனை அல்லது வாங்குதல் நடவடிக் கையின்போது நிரந்தரக் கணக்கு எண்ணை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என மத்திய பொது பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேநேரம் பான் எண்ணை தெரி விப்பதை தவிர்ப்பதற்காக, பணப் பரிவர்த்தனை பல நிலைகளாக பிரிக்கப்படுகிறதா என்பதைக் கண் காணிக்க வருமான வரித் துறை உரிய நடவடிக்கை எடுக்கும். அசையா சொத்து பரிமாற்றத் தின்போது, முன்பணமாக ரூ.20 ஆயிரம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும் வழங்கவும் தடை விதிக்கப்படும். இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. பினாமி பரிவர்த்தனை தடுப்பு உள்நாட்டில் கருப்பு பணம் உரு வாவதைத் தடுக்கும் வகையில் பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகம் செயப்படும். பினாமி நபர்களின் பெயரில் பெருமளவில் கருப்புப் பணம் பதுக் கப்படுகிறது. குறிப்பாக கருப்பு பணம் பினாமி களின் பெயரில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப் படுகிறது. இதுபோன்ற பினாமி சொத்துகளை பறிமுதல் செய்யவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் பினாமி பரிவர்த்தனை தடுப்பு மசோதா கொண்டுவரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஐந்து முக்கிய சவால்கள் வரும் நிதி யாண்டுக்கான பட் ஜெட்டை ‘வளர்ச்சிக்கான பட்ஜெட்’ என்று நிதிய மைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். பொரு ளாதாரம் வளர்ச்சிப் பாதை யில் பயணிக்க தயாராக உள்ளது. அதற்காக அரசு முதலீட்டை ஊக்குவிக்கும். அதேநேரம் சாதாரண பொதுமக்களும் இதன்மூலம் பயன்பெறுவர். நமது பொருளாதாரம் கீழ்க்கண்ட 5 சவால்களை எதிர் கொள்ள வேண்டி உள்ளது என்று ஜேட்லி தெரிவித்துள்ளார். 1. வேளாண்மைத் துறை வருமானம் கவலை அளிக்கும் வகையில் இருப்பது. 2. உள்கட்டுமானத் துறையில் முதலீட்டை அதிகரிப்பது. 3. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உற்பத் தித் துறையின் பங்கு 18லிருந்து 17 சதவீதமாகக் குறைந் துள்ளது. இந்தியாவில் தயாரிப் போம் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். 4. பொதுமக்களின் முதலீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை யில் நிதி ஒழுங்குமுறை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மத்திய அரசு வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதுதான் கூட்டாட்சி தத்துவம். 5. பட்ஜெட் பற்றாக்குறையை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.1 சதவீதம் என்ற அளவில் பராமரிக்க வேண்டி உள்ளது. இதை படிப்படியாக 3 சதவீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிமென்ட் மீதான உற்பத்தி வரி டன்னுக்கு ரூ.100 உயர்வு சிமென்ட் மீதான உற்பத்தி வரி டன்னுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட்டில் ஜேட்லி கூறியது: சிமென்ட் மீதான உற்பத்தி வரி டன்னுக்கு ரூ.900 ஆக இருப்பது டன்னுக்கு ரூ.1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். இது சிமென்ட் மீதான அதிகபட்ச உற்பத்தி வரி. அரசு விதிக்கும் ஒவ்வொரு கூடுதல் வரியும் சிமென்ட் விலையை உயர்த்தும் என்ற உள்நாட்டு சிமென்ட் உற்பத்தியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிமென்ட் விலை அதிகரிக்க இருக்கிறது. சிபிஐ-க்கான நிதி ஒதுக்கீடு 10% அதிகரிப்பு மத்திய பட்ஜெட்டில் சிபிஐ-க்கான நிதி ஒதுக்கீடு சுமார் 10 சதவீதம் அதிகரிக்கப் பட்டுள்ளது. நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு 2014-15ம் நிதியாண்டில் ரூ. 513.07 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் வரும் நிதியாண்டில் 565.39 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட் ஒதுக் கீட்டை காட்டிலும் சுமார் 10 சதவீதம் கூடுதல் ஆகும். கடும் குற்ற வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. நிர்வாக செலவுக்காக இதற்கு பட்ஜெட் டில் நிதி ஒதுக்கப்படுகிறது. சிபிஐயில் மின் ஆளுமை, பயிற்சி மையங்களை நவீனப்படுத்துவது, தொழில்நுட்பம் மற்றும் தடய அறிவியல் மையங்கள் ஏற்படுத்துவது, அலுவலகம், ஊழியர் குடியிருப்புகள் கட்டுவது போன்ற இதர தேவைகளுக்கும் இந்த நிதி பயன் படுத்தப்படும். லோக்பால், சிவிசி-க்கு அதிக ஒதுக்கீடு ஊழலுக்கு எதிரான அமைப்பான லோக்பால் அமைப்புக்கு பட்ஜெட்டில் ரூ.7.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் நலத்துறையின் கோரிக்கையை ஏற்று லோக்பால் அமைப் பின் நிர்வாக செலவு மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான செலவுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் ஒதுக்கீட்டை காட்டிலும் இது 3 மடங்கு அதிகம் ஆகும். இதுபோல் ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) பட்ஜெட்டில் ரூ.27.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை காட்டிலும் சுமார் ரூ.7 கோடி அதிகம் ஆகும். சிவிசிக் கான ஒதுக்கீட்டில் ரூ. 25.68 கோடி நிர்வாக செலவுக்கும் ரூ.2 கோடி விரிவாக்கப் பணிகளுக்கும் பயன்படுத்தப் படும். ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013’க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஒப்புதல் அளித்தார். லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எஸ்ஐடி-க்கு 10% உயர்வு கருப்புப் பணத்தை மீட்பது தொடர் பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய் வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) பட்ஜெட்டில் அருண் ஜேட்லி ரூ.45.39 கோடி ஒதுக்கியுள்ளார். கடந்த நிதியாண்டில் இதற்கு ரூ.41.34 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 10% அதிகரிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் எஸ்ஐடி செயல் படுகிறது. முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத் துணைத் தலைவராக உள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 11 பேர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க திட்டம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இதனை அறிவித்த அருண் ஜேட்லி கூறியது: இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க முக்கியமாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் திறனை அதிகரிக்க தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும். இந்தியா இப்போது இளைஞர்கள் மிகுந்த நாடாக உள்ளது. நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 54 சதவீதம் பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள். இருப்பினும், இன்றளவும் நாட்டின் தொழிலாளர்களில் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே முறையான திறன் பயிற்சி பெற்றுள்ளனர். முறையான தொழில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே தொழிலில் நிலைத்து நிற்க முடியும். தேசிய திறன் இயக்கத்தின் மூலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றார். சிறுபான்மை இன இளைஞர்கள் பள்ளி கல்வி சான்றிதழ் இல்லாமல் இருந்தால் கூட வேலைவாய்ப்பு பெறும் திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.5000 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 2005-ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அமல் செய்யப்பட்டது. ‘நூறு நாள் வேலை’ என்றழைக்கப்படும் இத்திட்டத்தை தற்போதைய பாஜக அரசு நீர்த்துப் போக செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக மக்களவையில் நேற்றுமுன்தினம் விளக்கமளித்த பிரதமர் நரேந்திர மோடி, ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தப்படாது என்று உறுதியளித்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். மின்சார வாகன தயாரிப்பை அதிகரிக்க ரூ.75 கோடி பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி கூறியது: நாட்டில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும், அதனை பலரும் வாங்கிப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக 2015-16-ம் நிதியாண்டில் ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனத்தில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட உதிரி பாகங்களுக்கான 6 சதவீத உற்பத்தி வரி சலுகை அடுத்து ஆண்டுக்கும் நீட்டிக்கப்படுகிறது என்றார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இதுபோன்ற வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அரசின் உதவி மிகவும் அவசியம். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.14 ஆயிரம் கோடி வரை ஒதுக்க வேண்டும் என்று அத்தொழில் துறையினரின் கருத்தாக உள்ளது. ரூ.1 லட்சம் கோடியில் 5 மெகா மின் உற்பத்தி நிலையங்கள் நாடு முழுவதும் மேலும் 5 மெகா மின் உற்பத்தி நிலையங்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் நிறுவப்படும் என்று அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை ‘பிளக் அன்ட் பிளே’ முறையில் செயல்படுத்தப்படும். நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த அனல் மின் நிலையங்கள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும். கடுமையான மின் பற்றாக்குறையை எதிர்கொண்டுவரும் பிஹாரில் ஒரு மின் உற்பத்தி நிலையம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 மெகா மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய பிரதேசம், ஆந்திரா, ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2-வது பிரிவு 2015-16 நிதியாண்டில் செயல்படத் தொடங்கும். நேரடி வரி வசூல் எதிர்பார்ப்பு ரூ.14.49 லட்சம் கோடி 2015-16-ம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.14.49 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2015-16-ம் நிதியாண்டின் செலவு ரூ.17.77 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியது: இந்த நிதியாண்டில் திட்டம் சார்ந்த செலவு ரூ.13.12 லட்சம் கோடி, திட்டம் சாராத செலவு ரூ.4.65 லட்சம் கோடி. நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அடுத்த 4 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும். அதிக அளவில் நிறுவனங்கள் வரி இருப்பது வருவாய், முதலீடு என இரு பிரிவையும் பாதிக்கிறது என்று கூறினார். விவசாய பணிகளை இணைக்க வேண்டும் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.கணபதி கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் அமலில் இருப்பதால் விவசாயத் தொழிலாளிகள் கிடைப்பதில்லை. இதனால் உரிய பருவக் காலத்தில் அறுவடை செய்வது கடினமாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெறுவதில்லை. இப்போதுள்ள பணிகளுக்கு பதிலாக கிணறு வெட்டுவது, புன்செய் நிலங்களில் நீர் சேமிப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகளை இத்திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்று கேட்கிறோம். நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்த 2015-16 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் உரையைக் கேட்கும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். (அடுத்த படம்) பொது பட்ஜெட் உரையைக் கேட்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இதர உறுப்பினர்கள். (கடைசி படம்) பொது பட்ஜெட் உரையைக் கேட்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. படங்கள்: பிடிஐ. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டில் மேலும் 6 எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனைகள் அமைக்கப் படும் என்று நிதியமைச் சர் அருண் ஜேட்லி கூறினார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசும்போது, “தமிழ் நாடு, அசாம், பஞ்சாப், இமா சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப் படும். பிஹாரில் மருத்துவ வசதிகளின் தேவை கருதி, அங்கு மேலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும்” என்றார். பிஹார், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர் தலை சந்திக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இம்மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலும் பாஜக வெற்றியை எதிர்பார்க்கிறது. இதை முன்னிட்டே பிஹாரில் எய்ம்ஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கருதப்படுகிறது. இதுபோலவே தமிழ்நாடு அடுத்த ஆண்டும், அசாம், பஞ்சாப், இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்த 2 ஆண்டு களிலும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கின்றன. நாட்டின் தலைசிறந்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகத் திகழும் ‘எய்ம்ஸ்’ தற்போது டெல்லியில் மட்டுமே உள்ளது. ஐஐடி, ஐஐஎம் ஜேட்லி தனது பட்ஜெட் உரை யில், புதிய ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்) மற்றும் ஐஐம் (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்) குறித்த அறிவிப்புகளையும் வெளியிட் டார். “கர்நாடகத்தில் மேலும் ஒரு ஐஐடி-யும் ஜம்மு காஷ்மீர், ஆந்திராவில் ஐஐஎம்-களும் அமைக்கப்படும்” என்றார். 150 நாடுகளுக்கு உடனடி விசா “கடந்த ஆண்டு 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு visa on arrival (VoA) என்ற திட்டத்தின் கீழ் உடனடி விசா வழங்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுலாத் துறை வளர்ச்சி கண்டுள்ளது. எனவே தற்போது இத்திட்டம் 150 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. 2022-ல் அனைவருக்கும் வீடு நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளை யில், அதாவது 2022-ம் ஆண்டுக் குள் அனைத்து குடும்பங்களும் சொந்த வீடு இருக்க வழிகாணப் படும். இது தொடர்பான அனைத்து திட்டங்களும் ஏழை களை மையமாகக் கொண்டே செயல் படுத்தப்படும்” என்றார் ஜேட்லி. கல்விக்கு ரூ.68,968 கோடி, கிராம மேம்பாட்டுக்கு ரூ.79,526 கோடி மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.68,968 கோடி, கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ.79,526 கோடி, நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது: மதிய உணவு திட்டம் உட்பட கல்வித் துறைக்கு ரூ.68,968 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சுகாதாரத் துறைக்கு ரூ.33,152 கோடி, கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ.79,526 கோடி, நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.22,407 கோடி, மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.10,351 கோடி, நீர்வள மேம்பாட்டுக்கு ரூ.4173 கோடி, நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் திட்டத்தில் 2.5 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி அளிக்க 7.5 லட்சம் கி.மீட்டர் தொலைவுக்கு ஆப்டிக்கல் பைபர் பதிக்கப்பட உள்ளது. அசோக சக்கரத்துடன் இந்திய அரசின் தங்க நாணயம் அசோக சக்கர முத்திரையுடன் மத்திய சார்பில் தங்க நாணயம் வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. “அரசிடம் உள்ள தங்கத்தை நாட்டுக்குள்ளேயே மறுசுழற்சி செய்யும் வகையில் அசோக சக்கர முத்திரையுடன் அரசே தங்க நாணயங்களை வடிவமைத்து வெளியிடும். இந்தியாவில் தங்க நுகர்வு அதிகம் உள்ளது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இந்தியாவில் விற்கப்படும் தங்க நாணயங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையாக உள்ளன. இதற்காக நாம் வெளிநாடுகளிடம் பணம் கொடுத்து தங்கம் வாங்க வேண்டியுள்ளது. அரசே தங்க நாணயத்தை வெளியிடுவதால் அந்நிய செலாவணி பெருமளவில் மிச்சமாகும்” என்றார். இந்தியாவில் ஆண்டுதோறும் 800 முதல் 1000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. 2015-16-ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதத்தை எட்ட இலக்கு. தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பான ரூ.2.5 லட்சத்தில் மாற்றம் இல்லை. எனினும் ஆண்டு வருமானம் ரூ.4,44,200 வரை உள்ளவர்களுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம், இமாச்சல பிரதேசம், அசாம், பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும். தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்து பணம் பெறும் புதிய திட்டம் தொடக்கம். நகர்ப் பகுதிகளில் 2 கோடி வீடுகள், கிராமப் பகுதிகளில் 4 கோடி வீடுகள் கட்டப்படும். பிரதான் மந்திரி கிராம சின்சாய் யோஜனா திட்டத்தில் சொட்டு நீர் பாசனத்துக்கு ரூ.5300 கோடி ஒதுக்கீடு. நபார்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு. ரூ.8.5 லட்சம் கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு. விவசாயிகளின் நலனுக்காக தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும். ராணுவத்துக்கு ரூ.2,46,727 கோடி ஒதுக்கீடு. கல்விக்கு ரூ.68,968 கோடி ஒதுக்கீடு. சுகாதாரத் துறைக்கு ரூ.33,152 கோடி ஒதுக்கீடு. மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.10,351 கோடி ஒதுக்கீடு. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு. நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு. சிறுதொழில் கடன் வழங்க முத்ரா வங்கி சேவை தொடக்கம். இந்த வங்கிக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜ்னா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு திட்டம். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜ்னா திட்டத்தில் ரூ.330 ஆண்டு பிரீமியத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு திட்டம். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் முதியோர்களுக்காக வாழ்வியல் உபகரணங்கள் வழங்கும் புதிய திட்டம் தொடக்கம். பி.பி.எப். திட்டத்தில் ரூ.3000 கோடி, இ.பி.எப். திட்டத்தில் ரூ.6000 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த நிதியில் முதியோருக்காக ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும். ரூ.20,000 கோடியில் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி அமைப்பு உருவாக்கப்படும். அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ரூ.150 கோடியில் ‘அடல் புதுமை திட்டம்‘ செயல்படுத்தப்படும். துறைமுக திட்டங்களில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும். ஒரு லட்சம் கோடியில் தலா 4000 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து மின் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்தியாவுக்கு வந்தபின் விசா பெறும் திட்டம் 150 நாடுகளுக்கு விரிவாக்கம். மரபுசாரா மின் உற்பத்தி 2022-ம் ஆண்டில் 175000 மெகாவாட் எட்ட இலக்கு. தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல் யோஜ்னா திட்டம் செயல்படுத்தப்படும். தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல் யோஜ்னா திட்டம் செயல்படுத்தப்படும். கல்வி உதவித் தொகை, கல்வி கடன் திட்டங்களை நிர்வகிக்க பிரதான் மந்திரி வித்யா லட்சுமி கார்யக்ரம் ஆணையம் உருவாக்கப்படும். கர்நாடகாவில் ஐ.ஐ.டி., ஆந்திரா, காஷ்மீரில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள், கேரளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்கலைக்கழகம் தொடக்கம். அடுத்த ஆண்டு முதல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை. நிறுவனங்களின் வரி 4 ஆண்டுகளில் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க புதிய சட்டம். அதன்படி வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்குவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வெளிநாட்டுச் சொத்துகளுக்கான வருமான வரியை தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். உள்நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைக்கு பான் எண் கட்டாயம். மேலும் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்ட மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும். செல்வ வரிக்கு பதிலாக 'சூப்பர்-ரிச் வரி' அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் இந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும். தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும். மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு 2020-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும். ஒவ்வொரு நகரம், கிராமத்திலும் மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து கி.மீட்டர் தொலைவுக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி அமைக்கப்படும். அனைத்து கிராமங்களிலும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும். மேக் இன் இந்தியா, இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டங்களின் மூலம் உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய சட்டம் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறலாம் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறலாம் என்ற புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எவ்வித பயனுமின்றி பொதுமக்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை வெளியே கொண்டு வந்து பயனுள்ள வகையில் பயன்படுத் தவும், தங்க இறக்குமதியை குறைக்கவும் இத்திட்டம் உதவி கரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இப்போது 20 ஆயிரம் டன் தங்கம் மக்களிடம் முடங்கிக் கிடக்கிறது. இவை விற்கப்படுவதும் இல்லை, பணமாக்கப்பட்டு பயன்படுத்தப் படுவதும் இல்லை. எனவே பொதுமக்களிடம் அபரிமிதமாக உள்ள தங்கத்தை பணமாக செலாவணியாக்கி அவற்றை நாட்டு நலனுக்கு பயன்படுத்திக் கொள்ள பட்ஜெட்டில் 3 திட்டங் களை அருண் ஜேட்லி அறிவித்துள் ளார். அதன்படி நிலையான வட்டியுடன் தங்கத்தை அடிப்படை யாக கொண்டு பத்திரங்களை அரசு வெளியிடும். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக அரசு வெளியிடும் பத்திரங்களாக வாங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது மட்டுமல்லாது மக்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வட்டி பெறுவதுபோல தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெற முடியும். தங்க நகைக் கடை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்தி பயனடைய முடியும். இப்போதுள்ள தங்க டெபாசிட் திட்டம், தங்க கடன் திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக இது செயல்படுத்தப்படும். வங்கி களும், பிற நிதி நிறுவனங்களும் தாங்கள் பெறும் தங்கத்தை பணமாக்கிக் கொள்ள முடியும். உள்நாட்டில் வீணாக தேங்கிக் கிடக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்வதன் மூலம் வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவது குறையும். இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும், வர்த்தக பற்றாக்குறையும் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது. பட்ஜெட் முக்கிய அம்சங்கள் எஸ்.சி. எஸ்.டி தொழில் முனைவோருக்கு ‘முத்ரா’ வங்கி சிறுதொழில்களுக்கு உதவ ‘சிறு தொழில் மேம்பாட்டு மறுநிதியளிப்பு முகமை’ (முத்ரா) ஏற்படுத்தப்படும். இந்த முத்ரா வங்கியில் எஸ்.சி, எஸ்.டி, தொழில்முனைவோருக்கு முன்னுரிமை அளித்து நிதியுதவி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.20,000 கோடி மூலதனத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த முத்ரா வங்கியின் கடன் உத்தர வாத மூலதனம் ரூ. 3,000 கோடி யாக இருக்கும். பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், இந்நிறு வனத்தின் எஸ்.சி, எஸ்.டி. தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கும். 5.77 கோடி சிறு நிறுவனங்களில் பெரும்பாலும் தனிநபர் உரிமை யாளர் என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றன. உற்பத்தி மற்றும் தொழிற்பயிற்சித் துறை சார்ந்த இந்த நிறுவனங்களில் 62 சதவீதம் எஸ்.சி, எஸ்.டி, மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிமை யானவை.
Monday, March 9, 2015
buget -----
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment